Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (10:56 IST)
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான தர்மதுரையில் நடித்திருந்த ஜீவா என்கிற சினேகாவுக்கு இப்படம் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.



சினேகா சிவகாசியை சேர்ந்தவர். திருநங்கையான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை வந்து சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினர்.

அதன்பின் எப்படியோ சினிமா துறையில் நுழைந்து மேக்கப் கலைஞராக பணியாற்றினார். நடிகை அனுஷ்கா, ஸ்ரேயா உள்ளிட்ட பலருக்கு இவர் மேக்கப் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

தர்மதுரை படத்தில் இவர் நடிகை விஷாலினிக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றினார்.  இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்த படம் அவரை பிரபலமாக்கியுள்ளது.

இந்த படத்தில் இவரைக் கண்ட அவரின் குடும்பத்தினர். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டே பேசியுள்ளனர். மேலும், பிரிந்து போன தன் குடும்பத்தையும் விரைவில் சந்திக்க உள்ளாராம் சினேகா.

இதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், படத்தின் இயக்குனர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை புகழ்ந்து பாராட்டி வருகிறார்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments