Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (13:27 IST)
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் ஆரம்பத்தில் இருந்த கெடுபிடிகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு தற்போது கடைகள் திறக்கவும், மக்கள் நடமாடும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
இருப்பினும் திரையரங்குகள் திறக்கவும் திரைப்பட படப்பிடிப்பு நடத்தவும் இன்னும் அனுமதிக்கப்படவில்லை இதுகுறித்து விரைவில் அரசு முடிவை அறிவிக்கும் என்று திரையுலகினர் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இப்போதைய சூழ்நிலையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் 
 
சின்னத்திரை படப்பிடிப்பிற்கு உள் அரங்குகள் போதுமானது என்றும் ஆனால் சினிமா படப்பிடிப்புக்கு அதிக நபர்கள் தேவை என்பது மட்டுமன்றி வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடப்பதால் படப்பிடிப்பை காண பொது மக்கள் கூடுவார்கள் என்றும், அதனால் பிரச்சனை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சினிமா படப்பிடிப்புக்கு இப்போதைக்கு அனுமதி கிடையாது என்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் அறிவிப்பு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments