Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டைட்டிலில் விக்ரம்பிரபு படம்

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (08:40 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த மிகப்பெரிய வெற்றி படம் 'துப்பாக்கி'. இந்த படத்தின் டைட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'துப்பாக்கி முனை' என்ற டைட்டில் விக்ரம்பிரபு நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்கி  வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ராசாமதி என்பவரும் எடிட்டராக எல்.வி.முத்துகணேஷ் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments