Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள் இருக்கு… சீக்ரெட் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:43 IST)
துணிவு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அந்த படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசு படத்துக்கான திரையரங்கு ஒப்பந்த வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் துணிவு படம் பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இன்னும் துணிவு படம் பார்க்கவில்லை. படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அஜித் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments