Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்த இதை செய்தாலே போதும்: நடிகர் பார்த்திபன் ட்வீட்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (11:56 IST)
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாணவர்கள்,  இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்  தொடர் அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய பாரம்பரிய வீர விளையாட்டை மீட்க  போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்க வேண்டிய அனைத்தும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது  என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

 
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கு மத்திய அரசு தான் ஏதாவது செய்யவேண்டும் என்று  எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்க, நம்ம ஊர் பொது கிராம சபை நினைத்தாலே போதும் என்கிறார். ஜல்லிக்கட்டு சார்பாக  முடிவு எடுக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றினால்  அது உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற புது தகவலை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments