Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் திரைக்கு வரும் திருடன் போலீஸ்

Webdunia
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (13:48 IST)
எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் தயாரித்திருக்கும் திருடன் போலீஸ் செப்டம்பரில் திரைக்கு வருகிறது.


 
 
எஸ்.பி.பி.சரண் தயாரித்த சென்னை 28 படம்தான் தமிழில் நியூ ஜெனரேஷன் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதேபோல் உலகத்தரம் வாய்ந்த ஒரு தமிழ் சினிமா என்றால் இவர் தயாரித்த ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி.சரண் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
 
அந்தவகையில் திருடன் போலீஸ் படத்தின் வெளியீட்டை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
 
அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் இயக்கியுள்ளார். யுவன் இசை. சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 
படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய அறிமுக இயக்குனர் கார்த்திக், பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. செப்டம்பரில் படம் கண்டிப்பாக திரைக்கு வரும் என்றார்.

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Show comments