Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ.செ-வில் நான் வரும் காட்சிகள் சொற்பமே.- பிரபல நடிகர் டுவீட்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (15:09 IST)
பொன்னியின் செல்வன் என்ற  படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் தான் குறைவான காட்சிகளில்தான் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.


ALSO READ: பொன்னியின் செல்வனை பார்க்க என் அம்மாவை அழைத்து வருவேன்: விக்ரம்
 
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கிஷோர் உள்ளிட்ட  என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது.  இதையடுத்து வீழ சோழா ஆகிய பாடல்கள் அடுத்தது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்   நேற்று  வெளியானது.

 இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பார்த்திபன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''சோழ தேசம் நோக்கி….
பொ.செ-வில் நான் வரும் காட்சிகள் சொற்பமே.
என் பாத்திரத்தின் பெயரிலேயே’சின்ன’உள்ளது.
எனவே ….

எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு சரித்திர பதிவு,மாபெறும் முயற்சி,வெற்றி பெற என்னால் இயன்ற Promotional குதிரை சவாரி. Let’s celebrate PS-1'' எனப் பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் குறைவான காட்சிகளில் வந்தாலும் பார்த்திபன் தனிமுத்திரை பதிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments