Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#64YearsofKamalism எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக.- நடிகர் கமல்ஹாசன்

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (16:44 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.  சினிமாவில் 64 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி இன்று  அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்  ''எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக'' என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.  இவர், களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 1960 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது. இப்படத்தில்  நடித்ததற்காக  அப்போதைய ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் பெற்றார் ஐந்து வயதான கமல்ஹாசன்.

அதன்பின்னர், மாணவன், அரங்கேற்றம், நான் அவனில்லை, மன்மத லீலை, ராஜபார்வை, காக்கிச்சட்டை, இந்தியன்,  விஸ்வரூபம் உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான் விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது அவர் இந்தியன் 2 , கமல்233 ஆகிய படங்களில் நடிப்பதுடன் சில படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில்  தயாரித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 64 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி,  அவரது காமன் டிபியை  நடிகர் விஜய் சேதுபதி ரிலீஸ்  இன்று ரிலீஸ் செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த  நிலையில்,  நடிகர் கமல்ஹாசன் தன் சினிமா பயணம் பற்றி ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘’64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments