Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின்’ லாபம்’ பட முதல் சிங்கில் ரிலீஸ்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (18:40 IST)
’லாபம்’ படத்தின் முதல் சிங்கில் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படத்தை அடுத்து தற்போது இருவரது கூட்டண்யில் மீண்டும் ஒரு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு லாபம் என்ற பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில்கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, உத்தரன்,ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசைமயமைத்துள்ளார்.

இப்படத்தை விஜய்சேதுபதி புரொடெக்சன்ஸ் மற்றும் இயக்குநர் 7.சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரெயிலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கில் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாழா யாழா என்று தொடங்கும் இப்பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

ஸ்ருதிஹாசன் தான் நடிக்கும் படங்களில் பாடியிருந்தாலும் இப்பாடல் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் காதலர்களுக்குப் பிடித்த மெலோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments