Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் திருமணம்? - யாருக்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (14:58 IST)
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் மட்டும் தான் தொடர்ந்து ஒரே தொகுப்பாளராக கமல் இருந்து வருகிறார். இந்தி, மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் மாறிக்கொண்டே இருப்பார்கள். 


 
அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் தற்போது துவங்கவுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பிக்பாஸ் தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் தற்போது 13 வது சீசனுக்காக போட்டியாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில்  பிரபல தொலைக்காட்சி நடிகை ரஷாமி தேசாய் தேர்வாகியுள்ளார். அவருடன் அவரது காதலர் அர்ஹான் கானும்  பங்கேற்கவுள்ளார். 
 
நடிகை ரஷாமி தேசாய் , நந்திஷ் சாந்து என்பவரை கடந்த  2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருது வேறுபாட்டால் கடந்த 2015ம் ஆண்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது நடிகை ரஷாமி தேசாய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சில நாட்கள் கழித்து அர்ஹான் கானும் போட்டியாளராக பங்கேற்கவுள்ளாராம். 


 
எனவே நடிகை ரஷாமி தேசாய் காதலர் அர்ஹான் கானை பிக்பாஸ் வீட்டிலேயே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த வந்தந்திகளுக்கு ரஷாமி தேசாய் கூறியுள்ள பதில், நான் மிகவும் பக்குவமான பெண். முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். பிக்பாஸ் வீட்டுக்குள் யாராவது திருமணம் செய்வார்களா எனத் தெரியவில்லை. இது முற்றிலும் வதந்தி நான் திருமணம் செய்யும் பொது நல்லமுறையில் மக்களிடம் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments