Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இந்தியன் -2' பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (16:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது இந்தியன் 2  படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம்  ’இந்தியன் 2’.

இப்படம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பல  பிரச்சனைகளை எல்லாம் கடந்து,  மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை தயாரிப்பு  நிறுவனம் எடுத்த  நிலையில், 3 வது பாகமும் உருவாகி வருவதாக தகவல் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்புகள்தான் காரணம்.

சமீபத்தில்,   இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலின் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்தது என படக்குழு அறிவித்தது.

எனவே இப்படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியிருந்தார்.

இந்த   நிலையில்,  நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தை கைப்பற்றியுள்ளது.  இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் தியேட்டரில் ரிலீஸாகி சில நாட்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் இப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments