Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி சரியாகத்தான் உள்ளது; கணேஷ் மற்றும் சுஜாவை கிண்டல் செய்யும் ஆரவ்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (17:36 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்னும் 11 நாட்களே மீதமுள்ள நிலையில், போட்டியாளர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகம் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நேற்று பேய் மற்றும் தேவதை டாஸ்க் முடிவடைந்த நிலையில், அடுத்து ‘கண்கட்டி வித்தை’ என்ற டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.
 
 
அதில் பவுலிங் லேனில் பத்து பவுலிங் பின்களை வைத்திருப்பார்கள் அதை ஓரே நேரத்தில் வீழ்த்திய பிறகு ஆக்டிவிட்டி  ரூமிற்கு சென்று, அங்கு வாலில்லாத யானை ஒன்று இருக்கும் போட்டியாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு அதன் சரியான இடத்தில் வாலை ஒட்ட வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
 
சுஜா, ஹரீஷ், கணேஷ் மூவரும் மஞ்சள் அணி. சிநேகன், ஆரவ், பிந்து மூவரும் பச்சை அணி. இரண்டு அணிகளில் டாஸ்க்கை குறைவான நேரத்தில் முடித்து டாஸ்க்கை வென்றது க்ரீன் டீம். இந்த டாஸ்க்கிற்கு பாயின்ட்ஸ் கிடையாது, ஆனால் யானை  வடிவ நினைவுக் கோப்பை ஒன்று பரிசளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில், போட்டியாளர்கள் அனைவரும் லிவிங் ஏரியாவில் இருக்கின்றனர். அங்கு வந்த கணேஷ் மற்றும் சுஜா கொஞ்ச நேரம் தனிமை வேண்டும். சுஜா என்னிடம் சொந்த கருத்தை (ரகசியம்) ஒன்றை  பேசவிருக்கிறார். அதனால் மற்றவர்கள் வேறு அறைக்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறார் கணேஷ்.
 
இதனை தொடர்ந்து ஆரவ் கூட்டணி எல்லாம் சரியாகதான் இருக்கிறது என்று ஹரிஷிடம் கூறி கிண்டல் செய்கிறார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments