Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இசையமைப்பாளர் மகளின் ஆல்பத்தை பாராட்டிய நடிகர்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (23:16 IST)
சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி. இப்பாடலைக் கேட்டு நடிகர் துல்கர் சல்மான் பாராட்டியுள்ளார்.
.

இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார்.

இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 2 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அவை மகிமைப்படுத்தப்படவேண்டும். நாங்கள் செய்யும் அனைத்தும் என் அன்பான் மக்களுக்காக….நாம் முன்னேறும்போது இந்தப் புரட்சியில் இணைய பல கலைஞர்கள் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்,நடிகர் துல்கர் சல்மான் இப்பாடல் குறித்துப் பாராட்டியுள்ளார். அதில், தீயின் குரலும்,  ஷ்டைலும் அழகாக உள்ளது.  சில நாட்களுக்கு முன் இதைக் கேட்டேன். அற்புதமாக இருந்தது. உங்களுக்கு ஹேட்ஸ் ஆப் யூ சார் என்று சந்தோஷ் நாராயணனைப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments