Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜ் எனக்கு உதவி செய்யலன்னு யார் சொன்னா? பரியேறும் பெருமாள் நடிகர் பதில்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (09:57 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஏன் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் அவருக்கு உதவி செய்யவில்லை என சமுகவலைதளங்களில் கேள்விகள் எழுந்தன. அதற்கு இப்போது அவர் பதில் சொல்லியுள்ளார். அதில் ‘செஞ்ச நன்றிய மறந்தா அப்புறம் நான் நல்லாவே வாழ முடியாது. என்னை உலகம் முழுக்க பிரபலமாக்குனதே அவருதான். இப்போ கர்ணன் படத்துலயும் வாய்ப்பு கொடுத்துருக்காரு.. இன்னும் ரெண்டு படத்துல நடிக்குற வாய்ப்பு வந்துருக்கு. அது எல்லாமே அவர் கொடுத்ததுதான்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments