Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்தால் கங்குவா படங்களின் ரிலீஸ் தேதி மாற்றமா?

vinoth
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:50 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் தங்கலான் திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருந்த சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments