Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுத்திரக்கனி & தம்பி ராமையா நடிக்கும் ராஜாகிளி படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (14:34 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி ராஜாக்கிளி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். முதலில் தம்பி ராமையா தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தார். இந்நிலையில் இப்போது அவரின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்துள்ள சென்சார் அதிகாரிகள் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments