Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 62' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (22:35 IST)
இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 62' படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை நாளை தொடங்குகிறது.

சென்னையில் நாளை எளிய முறையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குவதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இப்போதே டுவிட்டரில் தங்களுடைய கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். ஆம், #தளபதி 62 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments