Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தளபதி 63' படம் குறித்து முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (20:35 IST)
தளபதி விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
தெறி, மெர்சலை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி விஜய் புதிய படத்தில் இணைந்து உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் பேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு செட் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாம். இதனால் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 20-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments