Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி விஜய்யின் ‘கோட்’ பட சென்சார் தகவல்.. வெங்கட் பிரபு அறிவிப்பு..!

Siva
புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:50 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து யூஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது என்றாலும் ஒரு வாரத்திற்கு முன்பே வெளிநாடுகளுக்கு பிரிண்ட் அனுப்ப வேண்டும் என்பதால் முன்கூட்டியே சென்சார் பணிகளை படக்குழுவினர் முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ‘கோட்’ ட்ரெய்லர் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்