Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது தளபதி65 மாஸ் அப்டேட்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (17:10 IST)
நீண்ட நெடு காத்திருப்பிற்கு பிறகு விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று முக்கிய அப்டேட் வெளியாவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்ததும் அது அண்ணாத்த படம் பற்றியதா? விஜய் படம் பற்றியதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்நிலையில் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் வகையில் தளபதி 65 படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நடிகர் விஜய் நடிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். நெல்சன் படங்களுக்கு வ்ழக்கமாக இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments