Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நேசமணி'யால் தள்ளிப்போன 'தளபதி 63' அப்டேட்!

Webdunia
வியாழன், 30 மே 2019 (12:02 IST)
நேற்று மாலையில் இருந்து உலக அளவில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்த 'நேசமணி' என்ற வார்த்தை டுவிட்டர் இணையதளத்தையே கதிகலக்கி வருகிறது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் பதிவாகி வருகிறது. நடிகர் வடிவேல் அவர்களே இந்த மீம்ஸ்களையெல்ல்லாம் பார்த்து, 'நேசமணி போன்ற  கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் எனக்கு அளித்த பரிசு' என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் 'தளபதி 63' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்களிடம் விஜய் ரசிகர்கள் சிலர் 'தளபதி 63' படம் குறித்த அப்டேட்டுக்களை வெளியிடுங்கள் என்று டுவிட்டரின் மூலம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா கல்பாதி, '' இது நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் நேரம், 'தளபதி 63' படம் குறித்து அப்டேட்டுக்கான நேரம் அல்ல' என்று நகைச்சுவையாக டுவீட் ஒன்றை பதில் செய்துள்ளார்.
 
அதேபோல் கஸ்தூரி, சாய்தன்ஷிகா, பாலசரவணன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் நேசமணி குறித்து தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நடிகர் பாலசரவணன், 'இன்னும் 2000 வருஷத்துக்கு நேசமணியை ஒண்ணுமே செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments