Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவும் ஜெயலலிதா போல் இல்லையே: ‘தலைவி’ செகண்ட்லுக்கை கிண்டலடித்த நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (10:03 IST)
இதுவும் ஜெயலலிதா போல் இல்லையே
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஜெயலலிதா குறித்த போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது. ஜெயலலிதாவிற்கும் இந்த போஸ்டருக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்த போஸ்டர் அசத்தும் வகையில் இருக்க வேண்டும் என படக்குழுவினர் பணிசெய்து வந்தனர் 
 
இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த போஸ்டரிலும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போல் இல்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் இந்த போஸ்டரை எப்படி டிசைன் செய்தார்கள் என்று தெரியவில்லை என்ற ஆச்சரியத்தில் அனைவரும் மூழ்கி உள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்த அரவிந்தசாமி கேரக்டர் அச்சுஅசலாக எம்ஜிஆர் போலவே இருந்தது என்பதும், அதனை நெட்டிசன்கள் பாராட்டவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments