Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி லோகேஷ் பட ப்ரமோஷன் வீடியோவுக்கான செட் தயார்!

vinoth
வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதி படுத்துவது போல சமீபத்தில் வெளியான போஸ்டரில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்.

லோகேஷ் எப்போதும் தன்னுடைய படத்தின் டைட்டிலை ஒரு ப்ரோமோ வீடியோவோடு வெளியிடுவார். தலைவர் 171 படத்தின் டைட்டில் அப்டேட்டும் ஒரு ப்ரோமோவோடு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக செட் அமைக்கும் பணி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறதாம்.  ப்ரமோ ஷூட் விரைவில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments