Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தல 59' படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? புதிய தகவல்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (08:21 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றும், இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அஜித்துடன் நஸ்ரியா, வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.
 
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளதாகவும், இதுவொரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் வரும் மே மாதம் 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments