Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸ் ‘தமிழ் ராக்கர்ஸ்’ டிரைலர் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (14:51 IST)
அருண் விஜய் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது.

75 ஆண்டுகளுக்குமேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட "தமிழ் ராக்கர்ஸ்" என்ற தொடரை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் "தமிழ் ராக்கர்ஸ்" என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது.

இந்த தொடரில் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகனான அருண் விஜய் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் யானை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் சோனி லிவ் தளத்தில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சீரிஸின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SonyLIV (@sonylivindia)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments