Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள நடிகைக்குக் கோயில் கட்டிய தமிழ் ரசிகர்… என்ன கொடும சார் இது!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:06 IST)
மலையாள நடிகையான ஹனிரோஸ்க்கு தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் கோயில் கட்டியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். ஆனால் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இவர் மலையாள சேனல் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

அதில் அவர் “பாண்டி என்ற என்னுடைய தமிழ்நாட்டு ரசிகர் ஒருவர் என் முதல் படம் முதலே போனில் பேசி பாராட்டி வருகிறார். என் பிறந்தநாளுக்கு அவர் மக்களுக்கு பாயாசம் வழங்கி வருகிறார். இப்போது அவர் எனக்கு கோயில் கட்டியுள்ளார். இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments