Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'லியோ'பட சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (15:29 IST)
விஜயின் லியோபட சிறப்பு காட்சிகு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர்  வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது. 

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில்  ‘அன்பெனும்’ என்ற பாடல் இன்று  ரிலீஸாகும் என படக்குழு  நேற்று  அறிவித்தது.

இந்த நிலையில்,  லியோ படம் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது.

இந்த   நிலையில், லியோபட சிறப்பு காட்சிகு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது விஜய் ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments