Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரைப்பட இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் உடல்தானம்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:12 IST)
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 62 பேர் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 64 பேர் மரணத்திற்கு பின் அவர்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர்.


 
 
இறந்தபின் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் எந்த பயனும் இல்லாமல் போகும் உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், உடல் தானத்தில் நமது தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற பேராவலுடனும், மரணத்திற்கு பின் அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்து, அதற்கான உறுதிப் பத்திரங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்து, வாழ்த்து பெற வேண்டும் என்ற மனுவினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் வழங்கினார்.
 
அதன்படி முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர்களின் தன்னார்வ உடல் தானத்திற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி, வாழ்த்து பெற்றனர்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments