Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதன் கார்க்கியைப் பின்பற்றுவார்களா நடிகர் – நடிகைகள்?

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (15:07 IST)
மதன் கார்க்கியைப் போல், நடிகர் – நடிகைகளும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

ஜி.எஸ்.டி. வரியால் தமிழ் சினிமா முழி பிதுங்கிப்போய் உள்ளது. என்ன செய்வதென்று புரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். வேறு வழிகளில் இதை எப்படி ஈடுகட்டலாம் என்ற ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய சம்பளத்தில் இருந்து 15 சதவீதத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார் மதன் கார்க்கி. “பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதுவதற்காக நான் பெறும் சம்பளத்தில் இருந்து 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனசு எல்லோருக்கும் வந்தால், தமிழ் சினிமா மீண்டுவிடும் என்பது நிச்சயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்த ப்ரதீப்பின் ‘டிராகன்’ படம்!

என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது… பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்!

இணையத்தில் பரவி வரும் ஐஸ்வர்யா ராய் மகளின் மார்ஃபிங் வீடியோ! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments