Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு திடீர் ஒத்தி வைப்பு

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (13:43 IST)
விஷாலின் அரசியல் எண்ட்ரி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று திட்டமிட்டிருந்த தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. இந்த கூட்டம் தொடங்கும் முன்பே சேரன் உள்ளிட்டவர்கள் கூட்டத்திற்கு வருபவர்களிடம் துண்டுச்சீட்டு கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் தொடங்கியதும் விஷாலுக்கு எதிர்ப்பு அதிகமாகி அவருக்கு எதிரான தோஷங்கள் வலுத்தன. நேரம் ஆக ஆக விஷாலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில்  கூட்டம் பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்க விஷாலுக்கு தகுதியில்லை என்றும், வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் இயக்குனர் சேரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்க பதவியில் இருக்கிறவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது சங்க விதி என்றும் எங்கள் கருத்துக்களை கூற அனுமதி மறுக்கப்படுவதாகவும், நடிகர் ரித்தீஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க கணக்குகளை கேட்டது தவறா? என்றும் தயாரிப்பாளர் சங்க பிரச்சினையை தீர்த்துவிட்டு விஷால் அரசியலுக்கு செல்லட்டும் என்றூம் டி.ராஜேந்தர் ஆவேசமாக தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments