Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வருஷம் மார்க்கெட் போச்சு.... தமன்னா ஆபாச தொடரில் நடிக்க இதுதான் காரணமாம்!

4 வருஷம் மார்க்கெட் போச்சு.... தமன்னா ஆபாச தொடரில் நடிக்க இதுதான் காரணமாம்!
, வியாழன், 15 ஜூன் 2023 (17:42 IST)
தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 
 
பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப் படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
 
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் நடித்து வருகிறார் தமன்னா. இதில் நடிகர் விஜய் வர்மா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் முத்த காட்சி படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். 
 
இதுவரை அப்படி நடிக்காத தமன்னா இப்போ மட்டும் ஏன் பெயரை கெடுத்துக்கொள்கிறார் என ரசிகர்கள் குழம்பிபோயுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், கடந்த 4 வருடங்களாக மார்க்கெட் இழந்துவிட்டேன். அதனால் சம்பளமும் பெரிதாக கிடைப்பதில்லை. எனவே சம்பளமும் தன்னுடைய மார்க்கெட்டை மறுபடியும் பிடிக்கவே இப்படியான காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலத்தீவில் ஆண் நண்பருடன் குத்தாட்டம் குதூகலிக்கும் குட்டி நயன்!