Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி. இராஜேந்தரின் புதிய படைப்பு ‘இன்றைய காதல் டா’; சுவாரஸ்சிய தகவல்!

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (13:48 IST)
டி. இராஜேந்தர் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘இன்றைய காதல் டா’ என தலைப்பு வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என அனைத்தையும் டி. இராஜேந்தர் கவனிக்க உள்ளார்.
டி. இராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பில் படம் பற்றி கூறுகையில், ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா  என மோனாலிசா, சொன்னால் தான் காதலா, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ வீராசாமி ஆகிய பிரம்மாண்டமான  திரைப்படங்களை தயாரித்த “சிம்பு சினி ஆர்ட்ஸ்” நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்படும்  பிரம்மாண்டமான படைப்புதான் இன்றைய காதல் டா...!
நமீதா வித்தியசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இளம் நகைச்சுவை நடிகர்கள் ஆக பல புதிய முகங்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் இராதாரவி, இளவரசன், வி.டி.கணேஷ்,  வெ. ஆ. மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாபு, ‘கவண்’ ஜெகன், மைதிலி என்னை காதலி சுரேஷ், தினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, கொட்டாச்சி,  தியாகு போன்ற எண்ணற்ற நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.
 
முழுக்க முழுக்க இளமை சொட்டும் காதல்கதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கதை. காதல்...காதல்.. காதலை தவிர வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments