Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா அண்ணன் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்.. அவர் சொன்னதை செய்வோம்! – ரசிகர்களுக்கு தலைமை மன்றம் கடிதம்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:50 IST)
சமூக வலைதளங்களில் சூர்யா தொடர்பான எதிர்கருத்துகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலளிக்க வேண்டாம் என ரசிகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான நிலையில் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் ஒன்றாக பெற்றுள்ளது. முக்கியமாக ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாய மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக அச்சமூகத்தினர் பலர் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சூர்யா ரசிகர்கள் பல்வேறு ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்ற தலைமை சூர்யா ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சூர்யா சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது பொதுமக்களுக்கு தெரியும் என்றும், சூர்யா மீதான விமர்சனங்களுக்கு ரசிகர்கள் பதிலளித்து தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்ளாமல் சூர்யா அண்ணன் சொன்னதுபோல ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு நேரத்தை செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments