Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு நண்பர் இருக்காரு.. விஜய்க்கு மறைமுக வாழ்த்து கூறிய சூர்யா..!

Siva
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (07:33 IST)
சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சூர்யா, விஜய்க்கு தனது மறைமுக வாழ்த்துகளை தெரிவித்தார், இதனால் கரகோஷம் ஏற்பட்டது.
 
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது.
 
இந்த விழாவில் பேசிய சூர்யா, "உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் 'பாஸ்' என்று தான் கூப்பிடுவேன். கல்லூரியில் எனக்கு அவர் ஜூனியர் இருந்தாலும், என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்தார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். தற்போது அவர் துணை முதல்வர் என்ற பதவியில் உள்ளார்; மிகவும் எளிமையாக அணுகக் கூடிய நபர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் பார்க்கலாம். அவர் மென்மேலும் உயர வளர எனது வாழ்த்துக்கள்," என்று கூறினார்.
 
அதன் பின், "இன்னொரு நண்பர் இருக்கிறார்; அவரும் ஒரு புதிய பாதையை அமைத்து இருக்கிறார். அவருடைய பாதை வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்," என்றும் சூர்யா கூறினார். இன்று தன்னுடைய தவெக மாநாட்டை நடத்த இருக்கும் விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments