Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் களமிறங்கும் சூர்யா - நயன்தாரா

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (18:11 IST)
சூர்யா மற்றும் நயன்தாரா படங்களின் பர்ஸ்ட் லுக் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கிறது.

 
சூர்யா நடிப்பில், செல்வராகவன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவின் 36வது படமான இதை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோலவே நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் மார்ச் 5ஆம் தேதியே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
இப்படி இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் ரிலீஸாவதால், சூர்யா மற்றும் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments