Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிச்சேரி பீச்சில் காத்து வாங்கும் சூர்யா, கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (13:43 IST)
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, சூர்யா – கீர்த்தி சுரேஷ் இருவரும் பாண்டிச்சேரி சென்றுள்ளனர்.



 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. அத்துடன், ‘நான் தானா வீணா போனா’ என்ற பாடல், இன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சூர்யாவும், கீர்த்தி சுரேஷும் பாண்டிச்சேரிக்குப் போயிருக்கிறார்கள். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், பாடலுக்குத் தேவையான ஒருசில காட்சிகளில் நடிக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிகிறது. அதன்பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ மற்றும் ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments