Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவில் முதல் நடிகர்… தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 69 ஆவது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன்.

இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் தெலுங்கு திரையுலகில் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரம் தேவிஸ்ரீபிரசாத். வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments