Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் முதல் பாலிவுட் படமாக அதுதான் இருக்கும்… சூர்யா பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:22 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் அவர் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் சூர்யா, பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற இந்த படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.  மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கங்குவா பட ப்ரமோஷன் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “நான் நேரடி இந்தி படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. அதுவே எனது முதல் இந்திப் படமாக இருக்கும். அதை நான் அறிவிப்பதை விட என்னுடைய தயாரிப்பாளர்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தி படத்துக்காகதான் ‘புறநானூறு’ படத்தைக் கைவிட்டாரா சூர்யா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

’எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’: அஜித்தின் விடாமுயற்சி டீசர்..!

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments