Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை செருப்பால் ஒரு லட்சம் கிடைக்குமென்றால் ஏழை மாணவனுக்கு கிடைக்கட்டும்… சூர்யா பெருந்தன்மை!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (18:47 IST)
நீட் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் தருவேன் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

நீட் தேர்வு குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் காரசாரமான அறிக்கை வெளியிட்ட நிலையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் துணைத் தலைவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா என்பவர் பேசியபோது ’அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா என்றும், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார் என்றும், நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அர்ஜுன் சம்பத்துக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா ‘என்னை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த தொகை ஒரு ஏழை மாணவனுக்கு கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments