Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதார் படம் போல புது உலகத்தில் கங்குவா… மதன் கார்க்கி பகிர்ந்த தகவல்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:37 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி படம் பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “கங்குவா படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். நான் எழுதிய வசனங்கள் சிறிதும் மாற்றம் இல்லாமல் பயன்படுத்தப் பட்டுள்ளன.  கங்குவா திரைப்படம் அவதார் திரைப்படம் போல ஒரு புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments