Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

vinoth
வியாழன், 16 மே 2024 (13:50 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” என அறிவித்தனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

புற்நானூறு திரைப்படம் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிரான படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்குவதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்தை கைவிட்டுவிட்டு வேறொரு நாவலை படமாக்கலாமா என சூர்யா சுதா கொங்கராவிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் சுதாவுக்கு விருப்பம் இல்லாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments