Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கு எதிராக சூர்யா... சந்தானத்தால் பூதாகரமான பிரச்சனை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (12:06 IST)
தற்போது சந்தானத்தின் ரசிகர்கள் #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

 
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சந்தானத்தின் சபாபதி படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ள சந்தானத்திடன் ஜெய்பீம் பட விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சந்தானம், எனக்கு  #westandwithsuriya ஹேஷ்டேக் பற்றி தெரியாது. திரைப்படங்களில் உயர்வு தாழ்வு இருக்க கூடாது.   
திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்துவது சரியல்ல. எந்த ஒரு கருத்தையும் தூக்கிப்பேசலாம், எவரையும் தாக்கிப் பேசக் கூடாது என தெரிவித்தார். சந்தானத்தின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சந்தானம் இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சமூகத்தை ஆதரித்து இவ்வாறு பேசியுள்ளதாக கண்டனங்கள் வலுக்கின்றன.  
 
அதோடு சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேகோடு  #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தற்போது சந்தானத்தின் ரசிகர்கள் #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்குவதோடு #SuriyaAgainstVanniyars என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments