Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சுற்றுலா தளத்துக்கு ஷூட்டிங் செல்லும் சூர்யா 44 படக்குழுவினர்!

vinoth
புதன், 15 மே 2024 (06:47 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.


இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளராக திருவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். படம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை அந்தமான தீவுகளில் 40 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படக்குழு விரைவில் அந்தமான் செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments