சுதா கொங்கரா & சிவகார்த்திகேயன் படம் தொடங்குவதில் சிக்கல்… சூர்யாதான் காரணமா?

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (14:17 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த கதையைப் படமாக்கிக் கொள்ள சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்னும் தடையில்லாச் சான்றிதழ் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த படத்துக்காக சில நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்தது, முன் தயாரிப்புப் பணிகள் மேற்கொண்டது என பல கோடிகளை அந்நிறுவனம் செலவு செய்துள்ளதாம். அதனால் அந்த பணத்தை இப்போது படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்திடம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மம்மூட்டி நுழைந்ததும் எஸ்கேப் ஆன பிரபலம்! அப்போ தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி படம் டிராப்பா?

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படப்பிடிப்புக்கு வந்த துணை நடிகர் விபத்தில் மரணம்!

சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments