Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25,000 தொழிலாளர்களுக்கு பண உதவி செய்த சூப்பர் ஸ்டார்

Webdunia
சனி, 8 மே 2021 (20:39 IST)
கொரோனா வைரஸால்  வாழ்வாதாரம் இழந்து வாடுகின்ற  திரைப்படத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1500  வழங்கியுள்ளார் நடிகர் சல்மான்கான்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் சுமார் 25 000 திரைப்படத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1500 வீதம் வழங்குவதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தெரிவித்துள்ளார். சல்மான்கானின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வேலைவாய்ப்பின்றி உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும்படி மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் நடிகர்கள், மற்றும் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments