Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''பட டீசர் புதிய சாதனை!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:25 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தின் டீசர் நேற்று வெளியாகி சாதனை படைத்துள்ளது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.  இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது.

எனவே  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததுள்ளது.

இப்படத்தில் சல்மான் கான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படக்குழுவினர் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தப்படி  மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு  நேற்று  காட்பாதர் டீசர் வெளியானது.

ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாடி வரும் நிலையில், இந்த டீசரை சூப்பர் குட் பிலிம்ஸின் யூடியூப் பக்கத்தில் சுமார்8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.  22 ஆயிரம் பேர் கமெண்டுகள் பதிவிட்டுள்ளனர். 4 லட்சம் பேர்  லைக்குகள் பதிவிட்டுள்ளனர்.  

 இந்த  டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், படமும் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments