Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் குறித்த பேட்டி.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா..!

Mahendran
சனி, 27 ஜூலை 2024 (13:03 IST)
இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் சாவர்க்கர் குறித்து பேட்டி அளித்திருந்த நிலையில் அந்த பேட்டியில் தான் தவறான தகவலை கூறிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சாவர்க்கர் ஒரு மதிப்பு மரியாதை மிகுந்த நபர் என்றும் அவர் தனது மனைவியை படிக்க வைத்தார் என்றும் அவரே கையை பிடித்துக் கொண்டு மனைவியை அழைத்து பள்ளிக்கு அழைப்புச் சென்றார் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் 
 
இந்த பேட்டி பெரும் பரபரப்பை எடுத்து நிலையில் அவர் தவறான தகவலை பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து தற்போது சுதா கொங்கரா மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
 
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். 
 
எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments