Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசிடிவி கேமரா என்னாச்சு? ஸ்ரீதேவி மரணத்தில் கேள்வி எழுப்பும் சு.சுவாமி

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:16 IST)
ஸ்ரீதேவி மரணம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதியானதாக இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 
நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் தடயவியல் அறிக்கையில் அவர் பாத் டப் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆல்கஹால் கலந்திருந்தப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் ஸ்ரீதேவி மரணத்தில் தெளிவான தகவல்கள் வெளியாகாத காரணத்தினால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
அரசு தரப்பு தகவல்களுக்கு நாம் காத்திருப்போம். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதியானதாக இல்லை. அவர் அதிக அலவு மது எடுத்துக்கொள்ள மாட்டார் என்றால் எப்படி அவரது உடலில் மது கலந்தது. சிசிடிவி கேமரா பதிவுகள் என்னாச்சு? மருத்துவர்கள் திடீரென ஊடகம் முன் தோன்றி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
 
ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என்றும், முழுமையான தகவல்கள் கிடைத்தே பிறகு உறுதி செய்ய முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments