Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டிரைக்கில் மாற்றமில்லை – பிலிம் சேம்பர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (11:22 IST)
மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் மாற்றமில்லை என பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது. 
க்யூப் மற்றும் யு.எப்.ஓ. போன்ற டிஜிட்டல் முறைகளின் அதிக கட்டணத்தை எதிர்த்து, மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது தெலுங்குத் திரையுலகம். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகங்களையும் அது கேட்டுக்  கொண்டது. அவர்களும் கோரிக்கையை வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தனர். அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் எந்த புதுப்படமும்  ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறும், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் க்யூப் மற்றும் யு.எப்.ஓ. நிறுவனங்கள் அழைப்பு விடுத்தன. முதலாவதாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அதுவும்  தோல்வி அடைந்ததால், 23ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அதுவரை, ஸ்டிரைக்கில் எந்தவிதமான மாற்றமும் இல்லை தெலுங்கு  பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments