Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்

Webdunia
புதன், 23 மே 2018 (11:54 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில்தான், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  போலீஸ் தடியடியில் 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் ஸ்டண்ட் கலைஞரான ஸ்டண்ட் சில்வா தன்னுடைய தங்கையின் கணவர், துப்பாக்கி சூட்டில் பலியானதாக் ட்வீட்  செய்துள்ளார். அதில் எனது அன்பித் தங்கையின் கணவர், ஆருயிர் மாப்பிள்ளை ஜே. செல்வராஜ் ஸ்டெரலைட் போராட்டத்தில் போலீசாரால் சுட்டு  கொல்லப்பட்டார். இதனை வேதனையோடு பகிர்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments